வைரலாகும் ஹன்சிகாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள்
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. ‘சின்ன குஷ்பு’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘மஹா’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஹன்சிகா பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படம் அனைவரையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற உடையில் இவர் கவர்ச்சி காட்டி இருக்கும் இந்த புகைப்படம் தற்போது லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.