ஆக்ஷன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். ஆக்ஷன் திரைப்படத்தை தனக்கு என ஒரு பாணி வைத்து இயக்குவதில் லோகேஷ் கனகராஜ் திறமை பெற்றவர்.
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவை அவரின் LCU யூனிவர்ஸ் என்ற கான்சப்டில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் பெரும் அளவுக்கு மக்களால் கொண்டாடப்பட்டது. 500 கோடி ரூபாய் வசூலையும் குவித்தது.
இதனால் பல முன்னணி நாயகர்கள் தனக்கு படம் இயக்கி தருமாறு லைனில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார். இயக்குநராக இருந்து நடிகராக மாறியுள்ளார்.
கமல்ஹாசன் தயாரித்து ஸ்ருதிஹாசன் இசையில் ஒரு இண்டிபெண்டன்ட் ஆல்பம் பாடலை உருவாக்கி இருக்கின்றனர். அதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க, பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.இப்பாடலுக்கு “இனிமேல்” என தலைப்பு வைத்துள்ளனர்.
இப்பாடலின் டீசர் வெளியிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் நடிகராக பார்ப்பத்தில் புதிதாக இருக்கிறது. டீசரில் பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசனின் காதல் காட்சிகளே இடம்பெற்று இருக்கிறது. காதலில் இருந்து அவர்கள் கல்யாணம் செய்துக் கொள்ளும் வரை காட்சிகள் அமைந்துள்ளன.
இப்பாடல் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இப்பாடலின் டீசரின் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.