X

வைரலாகும் யானை படத்தின் மேக்கிங் வீடியோ

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருந்த படம் யானை. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட விதங்களை தொகுத்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.