மலையாள சினிமாவில் 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் தற்போதைய இளம் கதாநாயகர்களுக்கும் போட்டியாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
தொடர்ந்து வித்தியாசமான மற்றும் அதுரடியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் மோகன்லால் நடிப்பில் கடைசியாக வெளியான அரசியல் படமான லூசிபர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
வருடத்திற்கு இவர் நடிப்பில் 3 முதல் 4 படங்கள் உருவாகி வருகின்றன. தற்போதும் கைவசம் 4 படங்களை வைத்திருக்கிறார். அதில் ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார். விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாகவும் கூறியிருக்கும் மோகன்லால் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.