X

வைரலாகும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு புகைப்படம்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் லீக்காகி சமூக வலைதளங்களில் பரவியது.

தற்போது ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு குறித்த புகைப்படம் ஒன்றை நடிகை சுஹாசினி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஸ்பைடர்மேன் போன்று உள்ளவர்களை குறிப்பிட்டுள்ள சுஹாசினி, ‘அவர்கள் ஸ்பைடர்மேன் அல்லது சூப்பர்மேன் அல்ல என்றும் கேமரா தொழில்நுட்ப கலைஞர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.