Tamilசினிமா

வைரலாகும் பிரபு தேவாவின் ‘மைடியர் பூதம்’ பட பாடல்

நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபு தேவா ரேக்ளா, பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, இவர் நடித்துள்ள படம் ‘மைடியர் பூதம்’. இயக்குனர் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரம்யா நம்பீசன், மாஸ்டர் அஸ்வந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரெடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதை அடுத்து ‘மைடியர் பூதம்’ திரைப்படத்தில் இருந்து ‘எனக்கு மட்டும் ஏன் ஏன்’ லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடித்துள்ளார். பிரபுதேவாவின் இந்த கதாபாத்திரம், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.