வைரலாகும் பிக் பாஸ் 5-யின் புரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் அறிமுக புரோமோ வெளியிடப்பட்டது. இதில் நடிகர் கமல் புதிய லோகோவை அறிமுகம் செய்து வைப்பது போன்ற காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் விரிவான புரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வெளியாகி உள்ளது. கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை மையமாக வைத்து இந்த புரோமோவை உருவாக்கி உள்ளனர்.

“ஆயிரம் பொருத்தம் பார்த்து பண்ணும் கல்யாண வீட்டுலயே இவ்வளோ கலாட்டா இருக்கும் போது, வீடும் பெருசு, கலாட்டாவும் பெருசு. எதிர்பாராததை எதிர்பாருங்கள். பிக்பாஸ் தமிழ் சீசன் 5 விரைவில்” என்று கமல் பேசும் வசனத்துடன் முடிவடையும் இந்த புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools