X

வைரலாகும் ‘பிக் பாஸ் – சீசன் 6’ நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீஷினில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர். சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஆறாவது சீசனை தொகுத்து வழங்க இருக்கும் நபர் குறித்த எதிர்ப்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இதற்கு முன் நடந்து அனைத்து சீனனையும் கமல் தொகுத்து வழங்கி இருந்தாலும் இதற்கிடையில் கமல் தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கு பெற முடியாமல் போனதால் சிம்புவும் ரம்யா கிருஷ்ணனும் சில நாட்கள் தொகுத்து வழங்கினர். இதனால் இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா அல்லது வேறு ஏதேனும் திரைப்பிரபலங்கள் தொகுத்து வழங்குவார்களா என்ற கருத்துக்கள் இணையத்தில் பரவி வந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீனனின் புரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குவது போன்று புரோமோ வீடியோ இடம் பெற்றுள்ளது. அதில், வேட்டைக்கு ரெடியா? என்று கமல் வசனம் பேசியுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து நாயகன் மீண்டும் வரார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.