X

வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள்

‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் 2018-ல் தெலுங்கில் வெளியான ‘மகாநதி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சாணிக் காயிதம்’ மற்றும் ‘சர்காரு வாரி பாட்டா’ படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டினர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது இவர் மாஸான லுக்கில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.