வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் ஓணம் கொண்டாட்டம்
நாடு முழுவதும் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கேரளத்து பெண்ணான நடிகை கீர்த்தி சுரேஷும் ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். மேலும் அவர் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றார்.
தற்போது சிவா-ரஜினி கூட்டணியில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார். இதுதவிற தெலுங்கில் 3 படங்களையும், மலையாளத்தில் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார்.