Tamilசினிமா

வைரலாகும் தனுஷின் ‘நானே வருவேன்’ பட முதல் பாடல்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாடல் இன்று (07-09-2022) மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.