X

வைரலாகும் சாய் பல்லவியின் கார்கி பட டிரைலர்

இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் ‘கார்கி’. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

‘கார்கி’ படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. ‘கார்கி’ திரைப்படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கார்கி படத்தின் தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலங்களான சூர்யா, ஆர்யா, லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் இணைந்து வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அறிவித்தபடி இப்படத்தின் டிரைலர் வெளியானது. பெரும் எதிர்பார்பில் உருவான கார்கி படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.