சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமாகி விட்டது. டென் (10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச், வாக்குவம் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் மற்றும் பாட்டில் கேப் சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
நெட்டிசன்கள் ஏதேனும் ஒன்றை டிரெண்டாக்கி வருகின்றனர். சமீபத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பிரண்ட்ஸ் திரைப்படத்தின் நேசமணி எனும் வடிவேலுவின் கதாப்பாத்திரத்தை டிரெண்டாக்கினர். இப்போது அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்றம் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய வீரர்களான டோனி, ஜடேஜா, விராட் கோலி, தினேஷ் கார்த்தி, புவனேஷ் குமார் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளன.
மிகவும் தத்ரூபமாக எடிட் செய்யப்பட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.