X

வைரலாகும் ‘கணம்’ படத்தின் டிரைலர்

அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கணம்’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்க அவருக்கு அம்மாவாக நடிகை அமலா நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்திலிருந்து சமீபத்தில் ‘மாரிபோச்சோ’ பாடல் வெளியானது.

நடிகர் கார்த்தி பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலரை இசையமைப்பாளர் அனிருத் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.