வைரலாகும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட பாடல்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ‘அகலாதே…’ என்ற பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடியிருக்கிறார். பா.விஜய் பாடல் வரிகளை எழுத யுவனுடன் இணைந்து பிரித்வி பாடியிருக்கிறார்.

இந்த பாடல் கணவன் – மனைவிக்கு இடையேயான பாசம், காதல் மற்றும் புரிதலை விளக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவியிடம் ஒரு நொடி கூட என்னை விட்டு செல்லாமல் இருக்க வேண்டும். என் வாழ்வில், நடுவில் வந்த உறவு என்றாலும், நெடுந்தூரம் வருபவள் நீதான். என் குறைகள் நூறை மறந்து, எனக்காக தன்னை அர்பணித்தவள் என்று கணவன் மனைவியை புகழும் விதத்தில் பாடல் வரிகளை அமைத்திருக்கிறார் பா.விஜய்.

இந்த பாடல் வரிகளுக்கு மனதை மயக்கும் விதத்தில் இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அவருக்கே உரிய பாணியில் இந்த பாடலை பாடியிருக்கிறார். மெலோடி பாடல்களால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் யுவன்.

மொத்தத்தில் ‘அகலாதே’ பாடல் கணவன், மனைவிக்கு இடையேயான காதல்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools