வைபவுக்கு வில்லனான இயக்குநர் வெங்கட் பிரபு

வைபவ் நடிப்பில் `ஆர்.கே.நகர்’ மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர `காட்டேரி’, `சிக்ஸர்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துமுடித்துள்ளார்.

தற்போது நிதின் சத்யாவின் ஷ்வேத் குரூப்பின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் வைபவ் நாயகனாக நடித்து வருகிறார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜன் நாயகியாக நடிக்க, ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வைபவ், ஈஸ்வரி ராவ் இருவருமே போலீஸ் அதிகாரிகளாக நடிக்கின்றனர். இந்த நிலையில், ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க, நிதின் சத்யா – வைபவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் வில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools