வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை – சத்தீஸ்கர் முதலமைச்சர் அறிவிப்பு

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் நடப்பு 2023-24 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பூபேஷ் பாகேல் நேற்று தாக்கல் செய்தார். அதன்படி 18முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இவை தவிர அங்கன்வாடி ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை ரூ.6500-ல் இருந்து பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools