வேதா இல்லத்திற்கு எதிரே புதிய வீடு கட்டி கிரகபிரவேசம் செய்த சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். பின்னர் அவர் தி.நகரில் வசித்து வந்தார். இதனிடையே போயஸ் தோட்டம் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிதாக வீடு ஒன்றை கட்டி இன்று அதிகாலை கிரகபிரவேசம் செய்துள்ளார். சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news