தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா இப்போது அடிக்கடி நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் விவாகரத்து செய்து கொண்டபோது உங்களுக்கு எதிராக வந்த விமர்சனங்கள் பற்றி சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து சமந்தா கூறும்போது, “அந்த வேதனையிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. நீங்கள் அனைவரும் என்னை சுதந்திரமான எண்ணங்கள் கொண்ட வலுவான ஒரு பெண்ணாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால் நான் என்னை அப்படி நினைக்கவில்லை. நானும் எத்தனையோ கஷ்டங்கள், கண்ணீர், வேதனைகளை பார்த்தேன்.
இக்கட்டான நிலைமைகளுடன் எத்தனையோ இருட்டு நாட்களை எதிர்கொண்டேன். பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் வரும். அந்த எண்ணங்கள் என்னை நாசம் செய்து விடக்கூடாது என முடிவு செய்து கொண்டேன். முன்னுக்கு அடியெடுத்து வைத்தேன். குடும்ப உறுப்பினர்கள், சினேகிதர்கள் என்னோடு இருந்தார்கள். அவர்களால் தான் நான் இப்போது இங்கு இருக்கிறேன். ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் முழுமையாக மீளவில்லை. அப்போதைய நிலை மையை ஒப்பிடும்போது இப்போது வேதனை கொஞ்சம் குறைந்து இருக்கிறது” என்றார்.