Tamilசெய்திகள்

வேகமெடுக்கும் ட்விட்டரின் ரிபிராண்ட் பணிகள்

உலகின் முன்னணி சமூக வலைதளமாக டுவிட்டர் உள்ளது. எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, தளத்தில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் டுவிட்டர் லோகோ மாற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டுவிட்டர் தளத்தில் அந்நிறுவன அதிகாரப்பூர்வ ஹேன்டில் @X என்று மாற்றப்பட்டுள்ளது. முந்தைய @Twitter ஹேன்டில் தற்போது @X என்ற ஹேன்டிலுக்கு மாற்றி அனுப்பப்படுகிறது.

மற்ற டுவிட்டர் ஹேன்டில்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி டுவிட்டர் என்ற பெயருக்கு மாற்றாக X என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. கடந்த செவ்வாய் கிழமை அன்று டுவிட்டர் நிறுவனம் தனது புதிய X லோகோவாவில் சற்று பிரமான்ட கோடுகளை சேர்த்தது. பிறகு அது நீக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதிய லோகோ காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுதவிர டுவிட்டர்சப்போர்ட், டுவிட்டர்டெவ், டுவிட்டர்ஏபிஐ உள்ளிட்டவை @Xசப்போர்ட், @Xடெவலப்பர்ஸ், @API என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தின் ப்ரோபைல் படங்கள் X லோகோ மாற்றப்பட்டு இருக்கிறது. டுவிட்டரின் சந்தா முறை சேவையான டுவிட்டர்புளூ, @Xபுளூ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.