வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி
வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது நேற்று முன் தினம் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அது என்னவென்றால், இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை மிச்சம் வைத்து ஐந்து விக்கெட் மற்றும் அதற்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக இலங்கை முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடிய இலங்கை அணியானது 30 ஓவர்கள் மிச்சம் இருக்கையில் அதாவது 180 பந்துகள் மீதம் இருக்கையில் வெற்றி பெற்று அந்த சாதனையை நிகழ்த்தி அசத்தியது.
அதனை பின்னர் இந்திய அணி தான் இந்த பட்டியலில் இரண்டாவது அணியாக நேற்றைய போட்டியில் 163 பந்துகள் மிச்சம் உள்ள வேளையில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று அதிக பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது அணியாக இந்திய அணி உள்ளது.