வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி டிராவானது – இந்தியா தொடரை வென்றது

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சிறப்பாக ஆடி சதமடித்த விராட் கோலி 121 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 80 ரன்னும், ஜடேஜா 61 ரன்னும், யஷஸ்வி ஜெய்ஷ்வால் 57 ரன்னும், அஷ்வின் 56 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், வாரிகன் தலா 3 விக்கெட்டும், ஹோல்டர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பிராத்வெய்ட் 75 ரன்கள் எடுத்தனர். அலிக் 37 ரன்னும், சந்தர்பால் 33 ரன்னும், மெக்கென்சி 32 ரன்னும் எடுத்தனர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது தடைப்பட்டது. 3ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. சிராஜின் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா சார்பில் சிராஜ் 5 விக்கெட்டும், முகேஷ்குமார், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து, இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இதில், ரோகித் சர்மாவும், யாஷ்வி ஜெய்ஸ்வாலும் ஆட்டத்தை தொடங்கினர். ரோகித் சர்மா அரை சதம் அடித்து 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 2வது இன்னிங்சில் 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து மொத்தம் 301 ரன்கள் முன்னிலையில் இருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதைதொடர்ந்து, இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிரீத்வொயிட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் விளையாடினர். இதில், பரீத்வொயிட் 28 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மெக்கன்சி ரன் எடுக்காமல் வெளியேறினார்.

பின்னர், 4ம் நாள் ஆட்ட முடிவில், சந்தர் பால் 24 ரன்களும், பிளாக் அவுட் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

4ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற இன்னும் 289 ரன்கள் தேவை இருந்தது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது ஆட்டத்தை தொடங்கியது. களத்தில், சந்தர்பவுல் மற்றும் பிளாக்வுட் இறங்கினர். ஆனால், அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மழை இடைவிடாமல் பெய்து வருவதால், 5ம்நாள் ஆட்டமான இன்றைய போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது டெஸ்ட போட்டி டிராவில் முடிந்த நிலையில், தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports