X

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களம் இறங்குகிறார்

இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் இன்று தொடங்குகிறது. இந்திய அணியில் புஜாராவின் இடத்தில் யார் பிளேயிங் லெவனில் இடம் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அறிமுக வீரராகவும், தொடக்க வீரராகவும் களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இந்திய அணியின் 3-வது வரிசை வீரராக ஷுப்மன் கில் களமிறங்குவார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags: tamil sports