வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 – நியூசிலாந்து வெற்றி
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய 2வது டி20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடினார். அவர் 41 பந்தில் 76 ரன்னும், டேரில் மிட்செல் 20 பந்தில் 48 ரன்னும் குவித்தனர். கான்வே 34 பந்தில் 42 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஒபெட் மெக்காய் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 90 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியுள்ளது. 3-வது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.