X

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டி – இந்தியா தோல்வி

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னும், ஜடேஜா 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஒபெட் மெகாய் 6 விக்கெட்டு, ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 139 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 52 பந்தில் 68 ரன்கள் எடுத்து அவுட்டானார். கைல் மேயர்ஸ் 8 ரன்னும், நிகோலஸ் பூரன் 12 ரன்னும், ஹெட்மயர் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் டேவன் தாமஸ் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிபெறச் செய்தார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டேவன் தாமஸ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.