Tamilவிளையாட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் தொடர் – ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் உடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணைக் கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம் வருமாறு: ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.