X

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். இதில் ஷிகர் தவான் 23 ரன்னிலும், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ரோகித் சர்மா 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதற்கு பின் ரிஷாப் பண்ட் 4 ரன்னிலும், விராட் கோலி 28 ரன்னிலும், மணீஷ் பாண்டே 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.

Tags: sports news