வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 வது டெஸ்ட் – 507 ரன்கள் எடுத்து இங்கிலாந்து டிக்ளேர் செய்தது

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆன்டிகுவாவில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது. பிரிட்ஜ் டவுனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 153 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த லாரன்ஸ் 91 ரன்கள் அடித்தார்.

5 ஆம் பேட்ஸ்மேனாக களமிறக்கிய பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 11 பவுண்டரி, 6 சிக்சர்கள் அடித்தார். 128 பந்துகளில் 120 ரன்களை குவித்த நிலையில் அவர், பிராத்வெயிட் பந்துவீச்சில் அவுட்டானார்.

இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. அந்த இங்கிலாந்தை விட 436 ரன்கள் பின் தங்கியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools