இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை முதலில் களமிறங்கியது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே மட்டும் அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார்.
விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 69.4 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டும், ரோச்3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 291 ரன்னில் ஆல் அவுட்டானது. கார்ன்வெல் 61 ரன்னிலும், பானர் 31 ரன்னிலும், கேம்ப்பெல் 42 ரன்னிலும், கைல் மேயர்ஸ் 45 ரன்னிலும் அவுட்டாகினர்.
இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல் 5 விக்கெட்டும், சமீரா மற்றும் பெர்னான்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
102 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லஹிரு திரிமான்னே பொறுப்புடன் ஆடி அரைசதமடித்தார். அவர் 76 ரன்னில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடிய ஒஷாடா பெர்னாண்டோ 91 ரன்னில் வெளியேறினார்.
மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்செய டி சில்வா 46 ரன்னுடனும், நிசாங்கா 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது வெஸ்ட் இண்டீசைவிட இலங்கை அணி கூடுதலாக 153 ரன்கள் சேர்த்துள்ளது.