X

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் தவான் விளையாட மாட்டாராம்!

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான். இவர் வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

டி20 தொடர் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் சையத் முஷ்டாக் அலி டி20 லீக்கில் தவான் டெல்லி அணிக்காக விளையாடினார். அப்போது திடீரென அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்தார்.

தற்போது அவரது காயம் முழுமையாக குணம் அடையாததால் ஒருநாள் தொடரில் இருந்தும் நீக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை தவான் நீக்கப்பட்டால், சஞ்சு சாம்சன், ஷுப்மான் கில் அல்லது மயங்க் அகர்வால் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: sports news