வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டி – ஆப்கானிஸ்தான் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி 20 போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர்களின் சிறந்த பந்து வீச்சில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி நிலை குலைந்தது.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 106 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியின் கரீம் ஜனாத் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் டி 20 தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news