வெள்ளத்தில் சிக்கிய ரயில் பயணிகள் மீட்பு – மீட்பு குழுவினருக்கு அமித்ஷா பாராட்டு

வெள்ளத்தில் சிக்கிய ரெயில் பயணிகளை பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், இந்திய கடற்படையினர், ராணுவத்தினர், விமானப்படையினர், ரெயில்வே துறையினர் மற்றும் மாநில நிர்வாகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்டு, மும்பை அருகே வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

அவர்களது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மீட்புக் குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools