சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக அறிவித்தார்கள். அதன்படி, 1.30 மணிக்கு இதன் டிரைலர் வெளியானது.
இந்த டிரைலரில் அஜித் பேசும் வசனங்களான, பங்காளிகளா அடிச்சி தூக்கலாமா, என் கதையில நான் வில்லன்டா, உள்ளிட்ட பல வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய விஸ்வாசம் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.