அஜித் ‘வலிமை’ படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஏ.கே. 61’ படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏகே 61 படத்தின் அப்டேட் வெளியாகவில்லை என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘துணிவு’ என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மாஸான லுக்கில் அஜித் கையில் துப்பாக்கியுடன் படுத்திருப்பது போல் அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.