X

வெளிநாட்டு வீரரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த தயார் – ஐபிஎல் அணி நிர்வாகி அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் டி20 லீக் தொடரை அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. மத்திய அரசு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஏப்ரல் 15-ந்தேதி வரை விசா கொடுக்க தடைவிதித்திருந்தது.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற சில நாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமை படுத்தப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் 31-ந்தேதி வரை இந்த நிலைமை நீடித்து மற்ற நாடுகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்பட்டால் ஐபிஎல் போட்டிக்கான வெளிநாட்டு வீரர்களை வரவழைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்த தயாராக இருக்கிறோம் என தொடரில் பங்கேற்கும் அணியைச் சேர்ந்த அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணியின் நிர்வாகிகளில் ஒருவர் கூறும்போது ‘‘சில நாடுகளில் இருந்து வரும் நபர்கள் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ந்தேதிக்கு பிறகும் இது நீடித்தால், அது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்காது. அரசிடம் இருந்து அனுமதி பெற்று விசா வழங்கப்பட்டால், வீரர்களை தனிமைப்படுத்துவது மிகப்பெரிய விஷயமாக இருக்காது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் அவர்களை இங்கே ஏப்ரல் முதல்வாரத்தில் வரவழைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்த முடியும். ஆனால், முதலில் வெளிநாட்டு வீரர்களுக்கு விசா வழங்க வேண்டும். இதனால் மார்ச் 31-ந்தேதி வரை அரசின் முடிவிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

Tags: sports news