பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று அளிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வ கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் பதிலளித்தார். அப்போது அவர், மொத்தம் 90 வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,330 இந்திய கைதிகள் உள்ளனர். அதிகபட்சமாக 4,630 பேர் வளைகுடா நாடுகளின் சிறைகளில் உள்ளனர்.
நேபாளத்தில் 1222, பாகிஸ்தானில் 308, சீனா 178, வங்காளதேசத்தில் 60, இலங்கையில் 20 இந்தியர்கள் சிறைகளில் உள்ளனர். பல நாடுகளில் அமலில் உள்ள வலுவான தனியுரிமை சட்டங்களின் காரணமாக, சிறைக்கைதிகள் விருப்பப்பட்டால் அன்றி, அவர்களைப் பற்றிய தகவல்களை அந்நாட்டு அதிகாரிகள் அளிப்பதில்லை என தெரிவித்தார்.