X

வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் தங்கை

இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் காடுகளில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பவானி ஶ்ரீ இதற்கு முன்பு, க/பெ. ரணசிங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக பவானி ஶ்ரீ நடித்திருந்தார்.