வெற்றிப் பழக்கத்தை வளர்த்துக் கொண்டோம் – கே.எல்.ராகுல்

நியூசிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா 7 ரன்னில் வெற்றி பெற்று தொடரை 5-0 எனக் கைப்பற்றியது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.

பேட்டிங் செய்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இந்தியா பீல்டிங் செய்யும்போது கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 224 ரன்கள் விளாசினார்.

வெற்றிக்குப்பின் அவர் கூறுகையில் ‘‘இந்தியா 5-0 என வெற்றி பெற்ற பின் நான் இங்கு நிற்பது சந்தோசம் அளிக்கிறது. நாங்கள் மிகவும் அற்புதமான வகையில் டி20 கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இங்கு வந்து எங்களுடைய திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினோம். வெற்றியை நழுவ விடாமல் கைப்பற்றியது நம்பிக்கையை வளர்த்துள்ளது.

வெற்றிப் பழக்கத்தை நாங்கள் வளர்த்துள்ளோம் என்று நினைக்கிறேன். வெற்றிக்கான வித்தியாசமான வழிகளை கண்டுபிடிப்பது எங்களுடைய பொறுப்பாகும். டி20 உலக கோப்பை பற்றி நான் சிந்திக்கவில்லை. இதுபோன்ற சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news