Tamilசினிமா

வெற்றிகரமான 2வது வாரத்தில் விஷாலின் ‘லத்தி’

அறிமுக இயக்குநர் ஏ.வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘லத்தி’ திரைப்படம் ரசிகரகளின் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் இப்படத்தில் அவரது மனைவியாக சுனைனா நடித்திருக்கிறார். வில்லன் வேடத்தில் ராணா நடிக்க, முனிஷ்காந்த், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், மலையாள நடிகர் சன்னி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படம் குடிம்ப செண்டிமெண்ட் கலந்த பொழுதுபோக்கு படமாகவும் இருப்பதால், குடும்பத்தோடு ரசிகரகள் பார்த்து வருகின்றனர். குறிப்பாக தந்தை – மகன் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் வெகுவாக பாராட்டப்பட்டு வருவதோடு, ஆக்‌ஷன் காட்சியில் வைத்திருக்கும் செண்டிமெண்ட் காட்சியையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், ‘லத்தி’ திரைப்படம் வெற்றிகரமான 2வது வாரத்திலும் பல தியேட்டர்களில் ஹவுஸ் புல் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பல படங்கள் வெளியான நிலையில் ‘லத்தி’ 2வது வாரத்திலும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.