வெயிலின் தாக்கம் குறையும் வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
பீகார் மாநிலத்தின் கயா நகரில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு கடும் வெயிலால் அம்மாநில மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெயிலின் தாக்கம் குறையும்வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெயிலின் தாக்கத்தால் கயாவில் 12 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. வெயிலின் கடுமையான வெப்பம் பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, வெயிலின் தாக்கம் குறையும்வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
–