வெப் சீரிஸ்கள் தயாரிப்பில் இறங்கும் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் இணைய தொடர் தளத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். இதை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‘ஹாஸ்டேஜஸ்’, ‘ரோர் ஆப் தி லயன்’, ‘நச் பலியே’ உள்ளிட்ட வெப் சீரிஸ் மற்றும் நிகழ்ச்சிகளைத் தயாரித்திருக்கும் நிறுவனம் பனிஜாய் ஏஷியா.

இந்நிறுவனம், டர்மரிக் மீடியா என்ற நிறுவனத்துடன் இணைந்து மாநில மொழிகளில் இணையதளங்களுக்கான நிகழ்ச்சிகளை உருவாக்க உள்ளது. இவர்களுடன்தான் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். விரைவில் இந்தக் குழுவுடன் அவர் தயாரிக்க உள்ள வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டுவிட்டரில் இது பற்றிப் பகிர்ந்துள்ள கமல்ஹாசன், “எடுத்து வரும் முதல் முயற்சிகளில் ஒன்றாக, பனிஜாய் ஏஷியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து, நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடையவன் நான். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி” என்று குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools