Tamilசினிமா

வெப் சீரிஸில் நடிக்கும் அபிராமி

மாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர், குணச்சித்திர நடிகை என பன்முக கலைஞராக வலம் வந்துகொண்டிருப்பவர், அபிராமி. இவர் சமீபத்தில் வெளியான `நேர்கொண்ட பார்வை’ படத்தில் பமீதா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.

போட்டியிலிருந்து வெளியேறிய அபிராமி, இயக்குநர் கௌதம் மேனன் எடுத்துக்கொண்டிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்தது. இந்நிலையில் சோனி லிவ் செயலியில் வெளியாகியுள்ள ’இரு துருவம்’ என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிரைம் திரில்லராக இந்த தொடர் உருவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *