X

‘வெப்பன்’ படத்தின் டிரைலர் வெளியானது

நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘வெப்பன்’. இந்த படத்தில் தான்யா ஹோப், யாஷிகா ஆனந்த், ராஜிவ் மேனன், ராஜீவ் பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வசந்த் ரவி அடுத்து அசோக் செல்வனுடன் இணைந்து பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, ‘வெப்பன்’ படத்தில் நடித்துள்ளார். குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘வெப்பன்’ திரைப்படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன் படத்தின் டீசர் வெலியிடப்பட்டு மக்கள் கவனத்தை பெற்றது.

படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. சத்யராஜ் இப்படத்தில் யாருமே அழிக்க முடியாத ஒரு சூப்பர் ஹியுமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சத்யராஜை அனைவரும் கேங்ஸ்டர், கோஸ்ட் என்று பலரும் பல வித பெயர்களை வைத்து அழைக்கின்ரனர். அவரை அழிக்கும் மிஷனில் வசந்த் ரவி ஈடுப்படுகிறார். கிராபிக் காட்சிகள் மிரட்டலாக டிரைலரில் செய்தி இருக்கிறார்கள். இதனால் படத்தின் மீது மக்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.