வெப்சீரிஸில் நடிக்கும் வடிவேலு!

வசனத்தில் மட்டுமல்ல, தனது உடல் மொழியால், மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞன், நடிகர் வடிவேலு. மீம்ஸ்களில் மூழ்கி கிடக்கும், தற்போதைய தலைமுறையின் தலைவனாகவே வலம் வருகிறார், வடிவேலு. அனைத்து விதமான தருணங்களுக்கும், வடிவேலுவின் வசனங்கள் அப்படியே பொருந்தும்.

சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்கள் பெரிய அளவிற்கு சோபிக்கவில்லை. அதன் பின்னர், விஜய்யுடன் மெர்சல் படத்தில் கலக்கினார்.

இந்த நிலையில், தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இணையதள தொடர்கள் மீது வடிவேலுவின் கவனம் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் இணையதள தொடர் மக்கள் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

முன்னணி நட்சத்திரங்கள் இணையதள தொடரில் களமிறங்கியுள்ள நிலையில், வடிவேலுவும் இது தொடர்பாக புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இணையதள தொடரில் நடிப்பது தொடர்பாக புத்தாண்டில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools