கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த ‘வெந்து தணிந்தது காடு’ கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ என்ற பாடல் குறித்து அந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய பிருந்தா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், மல்லிப்பூ பாடலின் நினைவு. இந்த பாடலுக்காக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிகவும் அழகான நடனக் கலைஞர் சிம்புவுக்கு நன்றி. இந்த பாடலை ஒரே ஷாட்டில் முடித்தவுடனே பாடலுக்கான வரவேற்பைப் பார்த்தேன், நீங்கள் அனைவரும் பாடலை விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியும். அதற்குக் காரணம் ஏ.ஆர்.ரகுமான் ஐயாவின் மந்திர இசை என்று குறிப்பிட்டுள்ளார்.