Tamilசெய்திகள்

வெங்காயத்தின் விலையால் மத்திய, மாநில அரசுகள் தோல்வி – சித்தராமையா தாக்கு

வெங்காயத்தின் விலை தற்போது ஒரு கிலோ சுமார் ரூ.130 வரை விற்பனையாகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

வெங்காய விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டன. மக்களுக்கு தேவையான வெங்காயத்தை மத்திய அரசு உடனே இறக்குமதி செய்திருக்க வேண்டும்.

கள்ளச்சந்தையில் வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்காமல், மத்திய-மாநில அரசுகள் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *