வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது

சென்னை மக்கள் குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கூடுதல் குடிநீர் கிடைக்க வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வீராணம் ஏரி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியாகும். மேட்டுர் அணை திறக்கப்பட்டு, அதன்மூலம் வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்தடைந்தபோது ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களுக்கு வீராணம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது.

மேலும் சென்னைக்கு தினந்தோறும் 76 கனஅடி நீர் குடிநீருக்காக அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் தற்போது ஏரியின் கொள்ளளவு 2 மில்லியன் கனஅடி நீராக குறைந்துள்ளது. நேற்று சென்னைக்கு அனுப்பப்பட்ட நீர் 3 அடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் இன்று முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயி நிலங்களுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. வடலூர் வாலாஜா ஏரியில் இருந்து நீர் எடுக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாலாஜா ஏரியின் நீர் ஆதாரம் என்எல்சி சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools