Tamilவிளையாட்டு

வீரர்களுக்கு ஓய்வு – இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு பீட்டர்சன் கண்டனம்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டி 5-ந்தேதியும், 2-வது போட்டி 13-ந்தேதியும் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், மார்க் வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா ஏற்கனவே சொந்த மண்ணில் பலமான அணி. தற்போது ஆஸ்திரேலியாவையும் வென்றுள்ளதால் மிகப்பெரிய பலமாக திகழ்கிறது இந்தியா.

பலமான அணியால்தான் இந்தியாவை வெல்ல முடியும். இந்த நேரத்தில் சுழற்பந்து வீச்சு சிறப்பாக எதிர்கொள்ளும் பேர்ஸ்டோவுக்கு ஓய்வு, ஆல்-ரவுண்டர்களான சாம் கர்ரன், மார்க் வுட் ஆகியோருக்கு ஓய்வு, ஜோஸ் பட்லர் முதல் போட்டியில் மட்டுமே விளையாடுமே விளையாடுவார் என்பது மகிழ்ச்சி அளிக்கவில்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து சிறந்த அணியை தேர்வு செய்துள்ளதாக என்பது குறித்து மிகப்பெரிய விவாதம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சியான உணர்வு இருக்குமோ?. அதே உணர்வு இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால் இருக்கும்.

சிறந்த அணி விளையாடாதது இங்கிலாந்து ரசிகர்களுக்கும், பிசிசிஐ-க்கும் அவமரியாதைக்குரியதாகும். பேர்ஸ்டோவ் விளையாட வேண்டும். பிராட், ஆண்டர்சனும் விளையாட வேண்டும்’’ என்றார்.

இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் விளையாடிய பின்னர், ஐபிஎல் தொடரில் விளையாடிய பின்னர், பணம் சம்பாதித்த பின் ஓய்வு கொடுக்கலாம் என்றார்.