X

வீரர்களின் வாழ்க்கையை அழித்தவர் அப்ரிடி – பாகிஸ்தான் வீரர் தாக்கு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி. அவர் ‘கேம் சேஜ்சர்’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மியான்டட், வாக்கர் யூனூஸ் மற்றும் இந்திய முன்னாள் வீரர் காம்பீர் ஆகியோரை விமர்சித்து இருந்தார்.

வயது தொடர்பான விவரத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார். தனது சாதனை சதத்தை தெண்டுல்கர் பேட்டை பயன்படுத்தி அடித்ததாகவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் அப்ரிடியை அந்நாட்டு வீரர் இம்ரான் பர்கத் கடுமையாக சாடி உள்ளார். அப்ரிடி பல வீரர்களின் வாழ்க்கையை சுயநலத்துக்காக அழித்தவர் என்று குற்றம் சாட்டி உள்ளார். அவர் 20 வயது என்று பொய் கூறியது மிகவும் அவமானம். இப்படி சொல்பவர் எப்படி சிறப்பான வீரர்களை குறை சொல்ல முடியும் என்று இம்ரான் பர்கத் தெரிவித்து உள்ளார்.

Tags: sports news