ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இந்தி திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இந்தியாவின் புகழ் பெற்ற நடிகராக இருக்கிறார். மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடித்தும் பிரபலமானார். தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.
நவாசுதீன் சித்திக், ரம்ஜான் பண்டிகையை கொண்டாட மும்பையில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமமான புதானாவுக்கு சென்றார். இதற்காக மும்பை அரசு அலுவலகத்தில் அனுமதி சிட்டும் பெற்று இருந்தார். நவாசுதீன் சித்திக்குடன் அவரது குடும்பத்தினரும் சென்று இருந்தனர்.
கிராமத்தை அடைந்ததும் முஜாபர் நகர சுகாதார அதிகாரிகள் நவாசுதீன் சித்திக்குக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதுபோல் அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடந்தது. அவர்களுக்கும் தொற்று இல்லை. ஆனாலும் நவாசுதீன் சித்திக்கை வீட்டிலேயே 14 நாட்கள் அதிகாரிகள் தனிமைப்படுத்தினர்.